சென்னை, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 'நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் மத்திய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அதேபோல், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியும் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல். மாணவர்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, மத்திய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhis-arrest-minister-aadhav-arjuna-condemns




