சேலம், சேலம் மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்தை கண்டித்தும், சூயஸ் நிறுவனத்தின் டெண்டரை ரத்து செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று சேலம் கோட்டை மைதானத்தில், கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது;- “தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்குவது என்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார். சட்டமன்றத்திற்கு புதிய எம்.எல்.ஏ.க்கள் வந்திருக்கிறார்கள், ஏழ்மையான நிலையில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏ.க்கள் வந்திருக்கிறார்கள் வந்திருக்கிறார்கள், சொந்த கார் இல்லாத எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். அதே சமயம், ஏற்கனவே நான்கைந்து கார்களோ அல்லது 20 கார்களோ வைத்திருப்பவர்கள் கூட எம்.எல்.ஏ.க்கள் ஆகியிருக்கின்றனர். அவர்கள் காரை எங்கே நிறுத்துவது என்று தெரியாமல், அதற்காக பல ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கே காரை நிறுத்துகிறார்கள். எனவே, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் என்பது ஏற்புடையது அல்ல. தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் பணி ஆற்றுவதற்கு கார் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் ஏற்கனவே சொந்தமாக பல கார்களை வைத்திருக்கக்கூடிய நபர்களுக்கு எதற்காக அரசாங்க செலவில் கார் வழங்க வேண்டும்? உண்மையிலேயே சொந்தமாக கார் வாங்க முடியாத எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அரசு கடன் உதவி வழங்கி கார் வாங்குவதற்கு உதவி செய்யலாமே தவிர, அரசாங்க பணத்தை எடுத்து அவர்களுக்கு கார் வாங்கிக் கொடுப்பது ஏற்புடையது ஆகாது. அரசாங்கம் ஏற்கனவே நீதி நெருக்கடியில் இருப்பதாகவும், கஜானா காலியாக இருப்பதாகவும் பல அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் இவ்வளவு பெருந்தொகையை செலவிட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்குவது என்ற முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. எனவே அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இலவசமாக கார் வழங்குவது என்ற முடிவை தமிழ்நாடு அரசாங்கம் மறுபரிசனை செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-reconsider-the-decision-to-provide-cars-to-all-mlas-pshanmugam




