புதுடெல்லி, விலைவாசி உயர்வால் பண்டிகை கால மகிழ்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட் டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- பணவீக்கத்தின் கடுமையான அதிர்ச்சி, பண்டி கைக்கால மகிழ்ச்சியில் சுமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு மோடி அரசு வாரந்தோறும் பொதுமக்களின் பாக்கெட்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. வெங்காயம் மொத்த விலை 3 வாரங்களில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை 25 சதவீதம் அதிகரித்து விட் டது. பால், சர்க்கரை விலை உயர்ந்ததால், இனிப்பு விலை உயர்ந்து வரு கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அதன் தாக்கத்தை தனது புள்ளிவிவர வித்தைகள் மூலம் மறைப்பதில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/price-hikes-affect-festive-joy-congress




