லக்னோ, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஏற்றுமதி, இறக்குமதி கப்பல் கண்டெய்னர் மத்திய மந்திரி சர்பானந்தா அறிமுகப்படுத்திய மத்திய மந்திரி கடல்சார் வல்லரசு நாடாக உருவெடுத்து வரும் இந்தியா என தெரிவித்துள்ளர். இது தொடர்பாக இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கண்டெய்னர் இந்தியாவின் கடல்சார், உற்பத்தி துறைகளில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, உத்தர பிரதேச மாநிலம் தாத்ரியில் உள்ள 'மேர்ஸ்க்-கான்கார்' உள்நாட்டிலே ஏற்றுமதி, இறக்குமதி கண்டெய்னர் தயாரிக்கும் நிலையத்தில், உலகளவில், கப்பல் போக்குவரத்து நிறுவனமான 'ஏ.பி. மோல்லர், மேர்ஸ்க்' நிறுவனத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஏற்றுமதி, இறக்குமதி கப்பல் கண்டெய்னரை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் நேற்று அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால் கூறியதாதவது:- மேக் இன் இந்தியா பிரதமர் மோடியின் தன்னிறைவு இந்தியா, 'மேக் இன் இந்தியா', 'கடல்சார் திட்டங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியான அர்ப்பணிப்பு உணர்வை இந்த நிகழ்வு பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். கண்டெய்னர் அறிமுகம் கடந்த ஆண்டு பிப்ரவரி-ல் பிரதமர் மோடி, 'ஏ.பி. மோல்லர் மேர்ஸ்க்' நிறுவனத்தின் கண்காணிப்பு வாரிய தலைவர் ராபர்ட் மேர்ஸ்க் உக்லா இடையேயான சந்திப்பின்போது, இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த கண்டெய்னர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் அந்நிறுவனத்தை கேட்டுக் கொண்டிருந்தார். 16 மாதங்களுக்குள், இந்த தொலைநோக்கு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, சர்வதேச தரத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஏற்றுமதி, இறக்குமதி கப்பல் கண்டெய்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் ஆணை இந்தியாவின் வளர்ந்து வரும் கண்டெய்னர் உற்பத்தி சூழல் அமைப்பின் மீதான வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, இந்நிகழ்ச்சியின் போது 'மேர்ஸ்க்' நிறுவனம் 'டிசிஎம் ஶ்ரீராம் குழுமத்திடம்' இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள மேலும் 1,000 கப்பல் கண்டெய்னர்களுக்கான கொள்முதல் ஆணைகளையும் வழங்கியது. கடல்சார் வல்லரசு நாடு இது ஒரு நீண்டகால வணிக ஒத்துழைப்பிற்கான தொடக்கத்தை குறிக்கிறது. இது உலகளவில் கடல்சார் மதிப்பு சங்கிலியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழ், இந்தியா நம்பகமான உலகின் உற்பத்தி மையமாகவும், கடல்சார் வல்லரசு நாடாகவும் வேகமாக உருவெடுத்து வருகிறது என்று தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/india-emerging-as-a-maritime-superpower-union-minister-sarbananda-expresses-pride




