சென்னை, நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியினர் மற்றும் ஏராளமான இளைஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கமல்ஹாசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ஒரு குழந்தை அழுதபோதே நாம் அதைக் கவனித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நம் குழந்தைகள் பலர் உயிரிழக்கும் வரை நாம் காத்திருந்துவிட்டோம். கற்றலுக்குப் பதிலாகப் பயிற்சி வகுப்புகளும் (coaching), ஆர்வத்திற்குப் பதிலாகப் பதற்றமும், தகுதிக்கு (merit) பதிலாகக் குற்றச் செயல்களும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அமைப்பு சீரழிந்த ஒன்றாகும். கேள்விகளுக்குப் பதில்கள் கிடைப்பதற்குப் பதிலாகத் தடைகளும் தடியடிகளும் மட்டுமே குழந்தைகளுக்குக் கிடைக்கும்போது, அந்த நாடு தோல்வியடைந்ததாகவே அர்த்தம். இந்திய குழந்தைகளே, நீங்களே எங்களில் மிகச் சிறந்தவர்கள். உங்கள் கடமையை நீங்கள் செவ்வனே செய்துவிட்டீர்கள். இனி, உங்களுக்கான கடமையைச் செய்ய வேண்டியது நாட்டின் பொறுப்பு. உங்கள் கனவுகள் எப்போதும் பெரிதாக இருக்கட்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/resorting-to-a-lathi-charge-instead-of-answering-questions-implies-the-country-has-failed-kamal-haasan




