புது டெல்லி, விமானி ஸ்மித் மச்சாரின் வீரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட எப்.இசட்.1073 என்ற எண் கொண்ட பிளைதுபாய் விமானம் சென்றபோது நடுவானில் விமானிகள் இடையே கடும் சண்டை நடந்தது. கத்திக்குத்து காயம்பட்ட போதிலும் கேப்டனாக இருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் சாதுர்யத்துடன் செயல்பட்டார். இதனால், விமானத்தை தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டது. 174 பயணிகள் உயிர்தப்பினர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- இந்தியா பெருமை கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு மாவீரர். பெரும் ஆபத்தை எதிர்கொண்டபோதும், படுகாயம் அடைந்தபோதும், மற்றவர்களின் உயிரைக் காக்க அவர் அளவற்ற தைரியத்தையும் அசைக்க முடியாத உறுதியையும் வெளிப்படுத்தினார். அவரது வீரம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, ஒரு பெரும் துயரச் சம்பவத்தைத் தடுத்தது. கேப்டன் மச்சாரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணமடையவும், புத்துணர்ச்சி பெறவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/india-is-proud-of-the-bravery-of-pilot-smith-machar-pm-modi




