ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழா மேடையில், 'பறந்து போ' படத்துக்காக, 'சிறந்த இயக்குநர்' விருதை பெற்றார் இயக்குநர் ராம். விருது பெற்ற இயக்குநர் ராம் பேசியபோது,. "எனக்கு 2007-ல 'கற்றது தமிழ்' படத்துக்கு விகடன் 42 மார்க்தான் போட்டாங்க. 2013-ல 'தங்க மீன்கள்' படத்துக்கு 44 மார்க். அதுக்கப்புறம் 'தரமணி'க்கு 50 மார்க் குடுத்து சிறந்த டயலாக் ரைட்டர்னு அவார்டு தந்தாங்க. 'பேரன்பு' படத்துக்கு அவார்டு தந்தாங்க. ராம் குறைந்த பட்ஜெட்ல, திடமான நம்பிக்கையோட ரிஷப் ஷெட்டி சார் எடுத்த 'காந்தாரா' படம் இந்தியா முழுக்க ஓடி ஒரு டிரெண்டையே கிரியேட் பண்ணியிருக்கு. 'பறந்து போ' படத்தைப் பத்திச் சொல்லணும்னா, இது ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தோட 3 நாள்ல நடக்குற சம்பவம்தான். இதுக்குத் தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. 22 பாட்டுகளை ஒரு மாசத்துல முடிச்சுக்குடுத்த மியூசிக் டைரக்டர் சந்தோஷ் தயாநிதிக்கும், இபி நரனுக்கும், தயாரிப்பாளர் பிரதீப்புக்கும் என் நன்றி. நாளைக்கு ஜூலை 4-ஓட 'பறந்து போ' ரிலீஸாகி ஓராண்டு ஆகுது. என்னோட அடுத்த படமான 'ஏழுகடல் ஏழுமலை' இன்னும் ரெண்டு மாசத்துல வரப்போகுது. தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த மாதிரிப் படங்களை கமர்ஷியலா ஜெயிக்க வெக்கிறாங்க. எல்லாருக்கும் நன்றி!" என்றார். ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/ananda-vikatan-cinema-awards-2025-director-ram-speech




