மதுரை, மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்ற அரசு பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி. பெயர் பலகையில் 'மதுரை பயலுகடா. கொடூரமடா." என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த பயணிகள், அந்த பஸ் எந்த ஊருக்கு இயக்கப்படுகிறது என்பது தெரியாமல் குழம்பியபடி பயணித்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அரசு பஸ்களில் உள்ள பெயர் பலகைக்கான எல்.இ.டி. திரைகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு ஊர் பெயர்களுக்கு பதிலாக வேறு வார்த்தைகள் இடம்பெறுவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-payalugada-horror-slogan-on-government-bus-sparks-a-stir




