திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஸ்ரேயா சாமி தரிசனம் இதனிடையே, தமிழ், தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரேயா சரண். இவர் திருமணத்திற்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக திரைத்துறையை விட்டு விலகி இருந்தார். இவர் தற்போது தமிழில் சண்டக்காரி, நான் வயலென்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஸ்ரேயா இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தனது மகளுடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-shriya-saran-darshan-at-tirupati-temple




