ஜம்மு-காஷ்மீர், ஏழ்மைநிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்க காஷ்மீர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இலவச கியாஸ் சிலிண்டர்கள் ஜம்மு- காஷ்மீர் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த செப்.21ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காஷ்மீர் சட்டசபையில் அம்மாநில உணவு மற்றும் நுகர்பொருள் வினியோகத்துறை மந்திரி சதீஷ் சர்மா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஏழ்மைநிலையில் உள்ள 'அந்தியோதயா அன்ன யோஜனா' குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்க அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக அவர் அறிவித்தார். துரோகம் அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், எதிர்க்கட்சியான பா.ஜனதா உறுப்பினர்கள், இது ஏமாற்றுவேலை என்று கூச்சலிட்டனர். "ஆண்டுக்கு 12 இலவச சிலிண்டர்கள் வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, 6 சிலிண்டர்கள் அளிப்பது மோசடி. சிலிண்டர்கள், மின்சாரம், ரேஷன் என எல்லாவற்றிலும் இப்படித்தான் ஏமாற்றுகிறீர்கள். அனைவருக்கும் ஆறு சிலிண்டர்களை கூட வழங்காதது ஏழைகளுக்கு செய்யும் துரோகம். மேலும், ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது” என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுனில் சர்மா கேள்வி எழுப்பினார். இதனால், ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/6-free-lpg-cylinders-approved-annually-for-aay-families




