Vollständiger Artikel
திமுக கூட்டணியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறது என்று வைகோ அறிவித்து விட்டார். தவெக அரசுடன் வைகோ, துரை வைகோ இருவரும் காட்டிய நெருக்கத்தால் இது நடக்கும் என்றும் அரசியல் வட்டத்தில் பேசியது போல் நடந்தே விட்டது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய சொன்னதால் மதிமுக-வின் இரண்டு எம்.எல்.ஏக்களும் பொதுக்குழுவைப் புறக்கணித்து விட்டனர். சீர்காழி தனி தொகுதி மதிமுக எம்.எல்.ஏ-வான செந்தில் செல்வன் திமுக-வுக்குச் செல்கிறேன் என்று கூறி விட்டதாக வைகோ தெரிவித்துள்ளார். சீர்காழி மதிமுக எம்.எல்.ஏ செந்தில் செல்வன் ஆனால் இதுவரை செந்தில் செல்வன் நேரடியாக எங்கும் நான் திமுக-வில் சேருகிறேன் என்று சொல்லவில்லை என்கிறார்கள். சீர்காழி தொகுதிக்குள் தற்போது அவர் இல்லை. திமுக-வினர் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு தாயகம், அறிவாலயம் என்று எந்தப் பக்கமும் செல்லமாட்டேன் எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாகப் பேசப்படுகிறது. செந்தில் செல்வன் என்ன செய்யப்போகிறார் அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதே அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ''கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் சீர்காழி தனி தொகுதி மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டது. 'வசந்த காலம் வரப்போகிறது!' வைகோ பேச்சு - திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? மதிமுக-வில் செந்தில்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சொந்த தொகுதி என்பதால் சீர்காழி மீது தனி கவனம் செலுத்தினர் திமுக-வினர். தொகுதியில் பெரிதாக மதிமுவுக்குச் செல்வாக்கு இல்லாத நிலையில் திமுக-வினரை நம்பியே தேர்தலை எதிர் கொண்டார். துர்கா ஸ்டாலின் சொந்த ஊரான திருவெண்காடு அருகில்தான் செந்தில் செல்வன் ஊரான அகரபெருந்தோட்டம் உள்ளது. வைகோ செந்தில்செல்வனும் உற்சாகமாக களம் காண திமுகவினரும் வெற்றிக்காக உழைக்க எளிதாக கரை சேர்ந்தார் செந்தில் செல்வன். மதிமுக தவெக-வுடன் காட்டிய நெருக்கம், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதற்காக புள்ளி தொடங்கியதில் இருந்து செந்தில் செல்வன் சங்கடத்துக்கு ஆளானார். திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தவெக அரசுக்கு ஆதரவு அளித்தவர்களைக் குறிப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்ததையும் யோசித்தார். "'மந்திரி சபையிலும் இடம், திமுகவிலும் தொடர்கிறோம்' எனச் சிலர் சொல்வது எனக்கு புரியவில்லை" - வைகோ திமுக இல்லை என்றால் தன் வெற்றி சாத்தியமாகியிருக்காது என்பதை செந்தில் செல்வன் உணர்ந்திருந்தார். இப்படியான சூழலில் மதிமுக, தவெக கூட்டணிக்குச் செல்ல முடிவெடுத்து காய் நகர்த்தல்கள் நடந்தன. மதிமுக-வின் இரு எம்.எல்.ஏக்ளையும் ராஜினாமா செய்ய வைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது. மீண்டும் தவெக கூட்டணியில் அதே தொகுதி மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது திட்டம். இன்னொரு தேர்தலைச் சந்திக்க செந்தில் செல்வன் விரும்பவில்லை. அதற்கான பொருளாதாரம் தன்னிடம் இல்லை என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடத்தில் சொல்லியிருக்கிறார். துரை வைகோ இதனால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்ற தனது முடிவை வைகோவிடம் சொல்லியிருக்கிறார். இதை வைகோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்படியான சூழலில் தான் பொதுக்குழுவை செந்தில் செல்வன் புறக்கணித்தார். அவர் வெளிப்படையாக நேரடியாக யாரிடமும் தான் திமுக-வில் சேரப்போகிறேன் என்று சொல்லவில்லை. ஆனாலும் திமுக ஆதரவு தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களில் நான் திமுக-வுக்குச் செல்வதாகப் போட்டு விட்டனர், என்னுடைய சூழலை வைகோ புரிந்து கொள்வார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசியிருக்கிறார். சூழல் இப்படியிருக்கையில் வைகோ, செந்தில்செல்வன் திமுகவுக்குச் செல்வதாகச் சொல்லி விட்டார் என்று சொல்லியிருக்கிறார். இப்போதைக்கு தாயகம், அறிவாலயம் எங்கும் செல்லாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லது என்ற முடிவை எடுத்துள்ளார் செந்தில் செல்வன். மேலும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கும் விருப்பமில்லை, செய்யவும் மாட்டேன், எம்.எல்.ஏ-வாக தொடர வேண்டும் என்பதுதான் அவரது திட்டம் என அவரது தரப்பில் சொல்கிறார்கள்'' என்றனர். "அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்" - துரை வைகோ உறுதி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten



