பவ்நகர் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் மதுபானம் உற்பத்தி செய்வதற்கோ, விற்பனை செய்வதற்கோ அல்லது குடிப்பதற்கோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பவ்நகர் மாவட்டம் வர்தேஜ் நகரில், வெளிநாட்டு மதுபான லேபிள்களுடன் கூடிய பாட்டில்களில், உள்நாட்டிலேயே தயாரித்து அடைக்கப்பட்ட கள்ளச்சாராயம் விநியோகிக்கப்பட்டு உள்ளது. மெத்தனால் அதில், மெத்தனால் என்ற அதிக விஷ தன்மை கொண்ட ரசாயன பொருள் கலக்கப்பட்டு உள்ளது. இதனை அறியாமல் வாங்கி 67-க்கும் மேற்பட்டோர் குடித்துள்ளனர். இதில் பலர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. இதில், கடந்த 2 நாட்களில், 5 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கள்ளச்சாராயத்தில் 38.59 சதவீதம் அளவுக்கு மெத்தனாலும், 0.94 சதவீதம் அளவுக்கு எத்தனாலும் கலக்கப்பட்டு இருப்பது தடய அறிவியல் ஆய்வக பரிசோதனையில் இருந்து தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 21 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, அவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/gujarat-hooch-tragedy-death-toll-rises-13




