போர்ட் ஆப் ஸ்பெயின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது. 2வது டெஸ்ட் இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று முன் தினம் தொடங்கியது. கரீபியனில் உள்ள டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் 344 ரன்கள் அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 344 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஜஸ்டின் 73 ரன்களும், கேப்டன் ரோஸ்டன் 70 ரன்களும் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் சஜித் கான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் 266/2 இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் அப்துல் 107 ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 78 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/test-against-west-indies-pakistan-266-2




