சென்னை, 'தனது அரசியல் ஆசான் திருமாவளவன்' என சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார். இந்த நிலையில், தன்னை ‘கொள்கை ஆசான்’ எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அன்பு இளவல் உதயநிதி, உணர்ச்சிவசப்படாமல், உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையிலேயே தனது கருத்தை கூறியுள்ளார். அவரது கருத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எதிர்மறையான கருத்துகளைப் பேசி வருகின்றனர். எந்த தயக்கமும், நெருடலும் இல்லாமல் என்னை கொள்ளை ஆசான் என உதயநிதி கூறியுள்ளார். உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையில் மனம் திறந்து அரசியல் ஆசான் திருமா என உதயநிதி பேசியுள்ளார். இதனை பொறுக்க முடியாமல் பலர் எதிர்மறை கருத்து பேசுகின்றனர், விசிகவினர் எதிர்விமர்சனம் செய்யாமல் கடந்து செல்ல வேண்டும்." என திருமாவளவன் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumavalavan-thanks-udhayanidhi-stalin-for-referring-to-him-as-asan-mentor




