செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் அரசு பழதோட்டம் அருகே அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் கைதான 18 வயதில் இருந்து 21-வயது வரை உள்ள முதல் குற்ற செயல்களில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தப்பி ஓட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றவாளிகள் இருதரப்பினராக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த நிலையில் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்த 12 பேர் திடீரென அங்கிருந்த 2 ஆசிரியர்கள், ஒரு வார்டன் மற்றும் கேட்டில் இருந்த காவலாளி ஆகியோரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். கைது இதுகுறித்து செங்கம்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 12 பேரை தேடிவந்தனர். அவர்கள் அனைவரும் கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களை தேடி போலீசார் விரைந்து உள்ளனர். இதற்கிடையே சென்னை, கே.கே. நகரில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 11 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவைக்கு தப்பி வந்த 6 பேரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களை போலீசார் கோவையில் இருந்து சென்னைக்கு அழைத்து சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/6-more-escapees-from-chengalpattu-safe-house-arrested




