சென்னையில் தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது. சர்வதேச சந்தையிலோ, தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 3,600 டாலரை ஆகஸ்ட் 25-ம் தேதி தாண்டியது. அதன் பின், அடுத்த மூன்று-நான்கு நாள்களிலேயே தங்கம் விலை வெகுவாகக் குறைந்தது. தற்போது. இன்று சென்னையில் தங்கம் விலையைப் பார்த்தால், அது ஒரு கிராமுக்கு ரூ.14,270, ஒரு பவுனுக்கு ரூ.1,14,160 ஆக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,470.20 டாலர் என்று நேற்று வர்த்தகமானது. கச்சா எண்ணெய்"ஈரான் போர் முடிய 3 Optionsதான் இருக்கு; அவற்றில் ஒன்றை ட்ரம்ப் செய்யமாட்டார்" - அமெரிக்க அதிகாரி என்ன நடக்கிறது? தங்கம் விலை திடீரென்று குறைந்ததற்கு ஈரான் போரோ, கச்சா எண்ணெயோ காரணம் இல்லை. ஈரான் போர் தொடங்கியபோது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதெல்லாம், தங்கம் விலை குறைந்ததுதான். ஆனால், கடந்த மாதம் முதல், தங்கம் விலை கச்சா எண்ணெய் விலையைச் சட்டை செய்யவில்லை. தங்கம் விலை ஈரான் போரையும், கச்சா எண்ணெய் விலையையும் ‘நியூ நார்மல்’ ஆக எடுத்துக்கொண்டது என்றும் கூடச் சொல்லலாம். அந்தளவிற்குத் தங்கம் விலை பிற சர்வதேச மாற்றங்களை வைத்து மாறத் தொடங்கியது. இதனால், தற்போதைய தங்கம் விலை குறைவு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்களைத் தாண்டியதால் அல்ல. ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு! பொதுவாக, தங்கம் விலை மாற்றம் அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் முடிவை ஒட்டி மாறும். வட்டி குறைப்பு? - அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கிCareer: 'டிகிரி போதும்' SBI-ல் வேலைவாய்ப்பு; ஒரு மாதத்திற்கே குறைந்தபட்ச சம்பளம் ரூ.2.25 லட்சம்! ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் கூட்டினால், தங்கம் விலை குறையும். குறைத்தால், தங்கம் விலை ஏறும். காரணம், தங்கத்தை வாங்கிப் போட்டால், பெரிதாக எந்த வட்டியும் வராது. இதனால், ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியைக் கூட்டும்போது, முதலீட்டாளர்கள் வட்டி தரும் முதலீடுகள் பக்கம் தங்களது முதலீடுகளை மாற்றுவார்கள். இதனால், தங்கம் விலை குறையும். இதற்கு எதிர் ஃபார்முலாவில் வட்டி விகிதத்தைக் குறைத்தால், வட்டி பெரிதாக வராது என்று முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் தங்களது முதலீடுகளை மாற்றுவார்கள். I am waiting! இந்த மாதத்தின் 15-16 தேதிகளில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகித மாற்றம் அறிவிக்கப்படும். கடந்த வார வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியாகிய அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு அதிகரித்திருந்தால், மக்களின் நுகர்வு அதிகரிக்கும். இதையொட்டி, ஃபெடரல் ரிசர்வ் வங்கி தங்களது வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதனால்தான், தங்கம் விலை உயர்விற்குச் சற்று ‘வேகத் தடை’ ஏற்பட்டு, வங்கியின் அறிவிப்பிற்காக காத்திருக்கிறது அது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/personal-finance/gold/gold-prices-hit-a-speed-bump-as-fed-rate-hike-bets-rise




