கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முருகன்(45) அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். போக்சோ வழக்கு அங்குள்ள பள்ளியில், 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த 1-ம் தேதி மதியம் உணவு இடைவேளையின்போது, மளிகைக் கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் நைச்சியமாகப் பேசி தனது வீட்டிற்கு அழைத்து சென்ற முருகன், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அழுதுகொண்டே வீட்டிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்த சிறுமி, தன் தாயிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய், இது குறித்து கடைக்காரர் முருகனிடம் கேட்கச் சென்றுள்ளார். முருகன் மது போதையில் இருப்பதால், காலையில் பேசி கொள்ளலாம் என அங்கிருந்த ஊர்க்காரர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர். போக்சோ காலையில் சென்று கேட்ட போது, சிறுமியின் தாயை, ஆபாசமாக முருகன் திட்டியுள்ளார். இது குறித்து, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் புகார் செய்ததையடுத்து போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/gender/shop-owner-arrested-under-pocso-act-in-krishnagiri




