மணிலா, தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில், 14 வயதுடைய இரண்டு மாணவர்களும், துப்பாக்கிச் சூடு நடத்திய இளம் வயது நபரும் உயிரிழந்தனர். மேலும், குறைந்தது 10 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அரசாங்கம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கோட்டாபட்டோ பகுதியில் அமைந்துள்ள பங்கா தேசிய உயர்நிலைப் பள்ளியில் இன்று துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்த தொடங்கினார். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் அந்த இளைஞரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து 14 வயதுடைய ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி அகிய 2 பேர் உயிரிழந்தனர். மறுபுறம் போலீசார் அந்த இளைஞரை சுற்றி வளைத்து அவரை சுட்டுக் கொன்றனர். மேலும், இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர், ‘உண்மையான குற்ற சமூகம்’ (True Crime Community) என்று அழைக்கப்படும் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/philippines-shooting-on-school-campus-2-students-dead




