லண்டன் பயணம் போகாதது, அறுவை சிகிச்சைக்காக அளித்த மருத்துவ அறிக்கையில் குளறுபடி என, சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக இருக்கிறார், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. இடைத்தேர்தலுக்காக தாராபுரத்தில் பிரசாரம் செய்து கொண்டிருக்கும் அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். அறுவை சிகிச்சை நாளில் நீங்கள் ஹூண்டாய் நிறுவனத்தோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது சர்ச்சையாகி இருக்கிறதே? "தூத்துக்குடியில் அமைய உள்ள ஹூண்டாய் கப்பல் கட்டும் திட்டத்தின் ஆய்வுக் கூட்டம் நடந்தது, செப்டம்பர் 9ஆம் தேதி. அதை செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலமாக அன்றே பத்திரிகை செய்தியாக வெளியிட்டார்கள். அது தொடர்பாக மறுநாள் செப்டம்பர் 10ஆம் தேதி எனது அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டேன். அன்றைய தினம் மருத்துவரின் அறிவுரையின்படி அறுவை சிகிச்சை நாள் என்பதால், சமூக வலைதளத்தில் தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்புகிறார்கள். உண்மைக்கு மாறாக தகவல்களை வெளியிடுவது திமுக-வில் அங்கமாக இருக்கும் பென் நிறுவனத்தின் வேலை. இது தற்போது எனது பக்கமும் திரும்பி இருக்கிறது." ஹூண்டாய் கப்பல் கட்டும் துறைமுகம் தூத்துக்குடியில் இருந்து ஆந்திராவிற்கு போக இருப்பதாக கூறுகிறார்களே? "தென்கொரியாவில் ஹூண்டாய் கப்பல் கட்டும் துறைமுகம் புயலால் பாதிக்கப்பட்டது.இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டது. அதிலிருந்து புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் எதுவும் தாக்காத இடத்தில்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தை ஹூண்டாய் நிறுவனம் தேர்வு செய்கிறது. தூத்துக்குடியில் அமைய இருக்கிற ஹூண்டாய் கப்பல் கட்டும் துறைமுகம் புயலால் எந்த வகையிலும் பாதிக்காது என ஆய்வு செய்த பிறகுதான், அங்கே பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆந்திராவில் அவர்கள் சொல்லக்கூடிய இடத்தில் புயல் இயற்கை சீற்றங்கள் அதிகமாக வரும் என ஆய்வில் தெரியவந்ததால், ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்தை மட்டும்தான் தற்போது தேர்வு செய்திருக்கிறது. இந்தச் சூழலில் ஆந்திராவிற்கு ஹூண்டாய் நிறுவனம் போகப் போகிறது என ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சில பேர் கிளப்பிய வதந்தி, தமிழ்நாடு முழுவதும் தற்போது பரப்பப்பட்டு வருகிறது. இது ஹூண்டாய் நிறுவனத்திற்கும் பிடிக்கவில்லை என என்னிடமே அவர்கள் சொல்கிறார்கள்." லண்டன் சென்று முதலீடு ஈர்க்க வேண்டிய அந்த நேரத்தில் இந்த அறுவை சிகிச்சை எதற்காக? "கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான் டூவீலரில் சென்றபோது நாய் குறுக்கே வந்து விழுந்து, எனது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அப்போதே மருத்துவர்கள் எக்ஸ்-ரே எடுத்த பிறகு தோள்பட்டை எலும்பு முறிந்து விட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்லும்போது நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அப்போது பிளேட் பொருத்தப்பட்டது. அன்று தோள்பட்டை எலும்பில் பொருத்தப்பட்ட பிளேட் காரணமாக கடந்த ஒரு மாதமாக தொற்று ஏற்பட்டு, அரிப்பும் வீக்கமும் ஆக இருந்தது. இதை மருத்துவரிடம் காண்பிக்கும்போது இந்த பிளேட்டை நீக்க வேண்டும் எனப் பரிந்துரைத்ததால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது." கை வலி இருக்கிறது என்று நீங்களே கூறுகிறீர்கள். அப்படி இருக்கும்போது சாம்பார் வாளியை தூக்கி எப்படி சாப்பாடு பரிமாற முடிந்தது? "நான் கடந்த தேர்தலில் தி.மு.க-விற்காக பென் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போதுதான் இந்த விபத்து ஏற்பட்டு எலும்பு உடைந்தது. அப்போதே அறுவை சிகிச்சை செய்து முடித்த பிறகு கையில் இதே வலியோடு ஒரு கையில் கம்ப்யூட்டர் வேலைகளை செய்யத்தான் செய்தேன். இப்போது அமைச்சர் என்ற பொறுப்புக்கு வரும்போது வலியையும் பொருட்படுத்தாமல் எனது பணிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் ஆப்ரேஷன் செய்த கையில் எப்படி வாளியை தூக்கி சாப்பாடு போடுகிறீர்கள் என சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கிறார்கள். காலை உணவு விரிவாக்கத் திட்டத்தில் ஆப்ரேஷன் செய்திருப்பதால் கை வலியோடு பத்து குழந்தைகளுக்கு மட்டும் சாப்பாட்டை பரிமாறினேன். நான் சாப்பாடு பரிமாறாமல் விலகி இருந்தால், அதையும் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்திருப்பார்கள். நான் மீண்டும் சொல்கிறேன் எனக்கு திமுக-காரர்களைப் போல நடிக்க தெரியாது." மருத்துவ அறிக்கை போலியானது எனக் குற்றம்சாட்டுகிறார்களே? "லண்டனில் முதல்வர் முதலீடுகளை ஈர்க்கச் சென்றபோது, `நான்கு நாள்கள் கீர்த்தனா உடம்பில் என்ன பிரச்னை? மாதவிடாயா.' என்று சொல்லியெல்லாம் என்னைக் கொச்சைப்படுத்தினார்கள். அதே போலதான் மருத்துவ அறிக்கையும் போலியானது என்று வதந்தியைப் பரப்புகிறார்கள்." த.வெ.க ஆட்சியில் ரெட்டி கும்பல்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என விமர்சிக்கிறார்களே? நீங்கள் சட்டசபையில் விஷ்ணு ரெட்டிக்கு நன்றி தெரிவித்தீர்கள். எதற்காக? "ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை த.வெ.க அரசிற்கு பாராட்டுகளை விட விமர்சனங்கள்தான் அதிகமாக வருகின்றன. அதில் ஒரு விமர்சனம்தான் ரெட்டி கும்பல்கள் ஆதிக்கம் என நீங்கள் சொல்வது. விஷ்ணு ரெட்டி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என் திறமையைப் பார்த்து சிவகாசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். அதற்காகத்தான் அவரது பெயரை சட்டசபையில் பேசினேனே தவிர. வேறு எந்த உள்நோக்கமும் இதில் இல்லை." தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.கவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்று சொல்கிறார்களே? இப்படித்தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் விஜய் கட்சி ஆட்சியைப் பிடிக்காது, அவர் திரும்பவும் நடிக்கவே சென்று விடுவார் எனச் சொன்னார்கள். மாறாக த.வெ.க ஆட்சியைப் பிடித்தது. அதேபோல தான் விஜய் அண்ணா தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யும்போது பெரும் வெற்றியை இந்த தொகுதி மக்கள் எங்களுக்குக் கொடுப்பார்கள்." Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group. இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும். வணக்கம், BIG BREAKINGS முதல். அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/tamilnadu-industrial-minister-keerthana-interview




