சென்னை, முதல்-அமைச்சர் விஜய் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று பதக்கங்களை வழங்கினார். தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான 665 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இதில் ஐ.பி. எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத் தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர் திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதல்-அமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார். முதல்-அமைச்சர் விஜய் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதை அவர் பார்வையிட்டு அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. போலீஸ் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வரவேற்று சிறைப்புரை நிகழ்த்தினார். இந்த விழாவில் போலீஸ் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏக்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-awards-police-medal-to-665-police-officers




