புதுடெல்லி, 20-வது ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 19-ந்தேதி ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக தன்னை தயார்படுத்தி வரும் இந்திய குண்டு எறிதல் வீரர் 31 வயதான தஜிந்தர்பால் சிங் தூர் நேற்று அளித்த பேட்டியில், '22 மீட்டர் தூரத் துக்கு குண்டை எறிந்து தேசிய சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது கனவு. இதன் மூலம் இந்திய இளம் தலைமுறையினர் 21 மீட்டர் தூரத்தை சாதாரண விஷயமாக கருத வேண்டும். இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 90 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டி எறிந்த பிறகு. இப்போது 80-82 மீட்டர் எதுவும் இல்லை என்றாகி விட்டது. ரோகித் யாதவ் 87.68 மீட்டர் தூரம் எறிந்துள்ளார். சச்சின் யாதவ் 86-க்கு மேல் வீசியுள் ளார். யாஷ்வீர் சிங் காமன்வெல்த் விளையாட்டில் தனது தனிப்பட்ட சாத னையை பதிவு செய்தார். திரும்பி பார்த்தால், 85 மீட்டருக்கு அதிகமான தூரம் ஈட்டி எறிந்த வீரர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ் கிறது. நீரஜ் சோப்ரா போல் நானும் குண்டு எறிதலில் புதிய தரநிலையை உருவாக்க விரும்புகிறேன்' என்றார். தேசிய சாதனையாளரான தஜிந்தர் பால் சிங் 21.77 மீட்டர் தூரம் குண்டு எறிந்ததே அவரது சிறந்த செயல்பா டாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/my-dream-is-to-set-a-national-record-tajinder




