சென்னை, ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னை - கொல்லம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுதபூஜையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06117) மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து அக்டோபர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06118) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. கொல்லத்தில் இருந்து இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில சனிக்கிழமை 11.40 மணிக்கு இயக்கப்படும் மற்றொரு சிறப்பு ரெயில் (06121) மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து அக்டோபர் 4, 11, 18, 25, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06122) மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலை வந்தடைகிறது. டிக்கெட் முன்பதிவு இந்த சிறப்பு ரெயில்கள் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (செப்.23) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ayudha-puja-special-special-trains-between-chennai-and-kollam-via-salem-erode-and-tiruppur




