தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பிடி அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிடி அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை காவல் ஆணையர், ஜூலை 11 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பிடி அரசகுமாரின் மனைவி கோகிலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2024-25 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு, 2026 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை எனவும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 23 ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், பிடி அரசகுமார் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-regarding-rs-100-crore-fraud-goondas-act-detention-against-pt-arasakumar-quashed




