புதுடெல்லி இந்தியாவில் ரூ.100 கோடிக்கு கூடுதலாக வருவாய் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்து உள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நிதி துறைக்கான மத்திய இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, 2025-26 ஆண்டில், இந்தியாவில் ரூ.100 கோடிக்கு கூடுதலாக வருவாய் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்து உள்ளது. இது, 2021-22 ஆண்டின்போது 142 என்ற அளவில் இருந்தது என பதிலளித்து உள்ளார். இதனால், கணக்கெடுப்புக்கான கடந்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்து உள்ளது தெரிய வருகிறது. எனினும், வருமான வரி சட்டம், 2025-ன்படி கோடீசுவரர் என்ற வரையறை எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சொத்து விவரங்கள் 100 கோடிக்கும் கூடுதலாக சொத்துகள் வைத்திருக்கும் நபர்களின் விவரங்களை அரசு பராமரிக்கின்றதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சொத்து வரி சட்டம், 1957 ஆனது, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நீக்கப்பட்டு விட்டது. இதனால், வரி செலுத்துவோரின் மொத்த சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை, தொடர்ந்து பராமரிக்கும் பணி எதனையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். இதில், 5 ஆண்டுகளில் முதன்முறையாக 2025-26 ஆண்டில், ரூ.100 கோடிக்கு கூடுதலாக வருவாய் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை 500-ஐ விட உயர்ந்து உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/rs-100-kodikku-kooduthalana-varuvai-thaninaipar-ennikkai-5-aandugalil-4-madangaga-athigarippu-arasu-thagaval




