கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தென் ஆப்பிரிக்கா. இந்நாட்டில் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டினருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. குறிப்பாக, ஆப்பிரிக்காவின் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் தென் ஆப்பிரிக்காவில் உள்ள வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்புகளை எடுத்துக்கொள்வதாகவும் கூறி போராட்டங்களும் நடைபெற்றன. மேலும், தென் ஆப்பிரிக்காவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன துப்பாக்கி சூடு - 3 பேர் பலி இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த 4 நாட்களில் 3 நைஜீரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் தென் ஆப்பிரிக்காவின் வெவ்வேறு நகரங்களில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நைஜீரிய அரசு, இனவெறி ரீதியில் நடத்தப்படும் தாக்குதல்களை தென் ஆப்பிரிக்கா தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/three-nigerians-killed-in-south-africa-tensions-with-nigeria-deepen




