இந்தியாவின் பிளாக்பெர்ரி என்ற சிறப்புக்குரியது, நாவல் பழம். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கோடைகால பழம் இதுவாகும். நாவல் பழம் என்றாலே ஊதா நிறத்தில் காட்சி யளிக்கும் பழம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் நாவல் பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. அவற்றுள் வெள்ளை நிற நாவல் பழம் பற்றி பலரும் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் சாதாரண ஊதா நிற நாவல் பழத்துடன் ஒப்பிடும்போது வெள்ளை நாவல் பழமே சிறந்தது. அதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போமா. நிறம் வெள்ளை நாவல் பழத்தின் தோல் மங்கலான வெள்ளை அல்லது ஒளியுடன் கூடிய வெளிர் ஊதா நிறத்தில் இருக்கும். கறுப்பு நாவல் பழத்தின் தோல் இருண்ட ஊதா அல்லது கறுப்பு நிறத்தில் இருக்கும். சுவை வெள்ளை நாவல் பழத்தின் சுவை சற்றே காரசாரம் குறைவாக இருக்கும். சில நேரங்களில் கசப்பாகவும் இருக்கும். கறுப்பு நாவல் பழம் சுவையில் சிறிது கரிசல் மற்றும் இனிப்பு தன்மை கலந்த கசப்பான தன்மையுடன் இருக்கும். ஊட்டச்சத்துகள் நிறைந்தவை. இரண்டு நாவல் பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றவை என்றாலும் ஊதா நிற நாவல் பழம் புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவையை கொண்டிருக்கும். வெள்ளை நாவல் பழம் மென்மையானதாகவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்தும் காணப்படும். குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவிடும். வைட்டமின்கள் சி, ஏ, மற் றும் பி-காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச்சத்துகளும், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக் களும், ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகளுக்கான ஆன்டி ஆக்சிடென்டுகளும் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றல் உள்ளிட்ட உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை. குறைந்த கிளைசீமிக் குறியீடு குறைந்த கிளைசீமிக் குறியீடு கொண்ட உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் அவை ரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தாது. சிஜிஜியம் கும்மினி என்று அழைக்கப்படும் வெள்ளை நிற நாவல் பழம், சுமார் 25 முதல் 30 கிளைசீமிக் குறியீட்டை கொண்டிருப்பதால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சிறந்த பழத் தேர்வாக அமைகிறது. இதை தொடர்ந்து உட்கொள்வது சிறந்த கிளைசீமிக் கட்டுப்பாட்டிற்கு உதவுவதோடு, நீரிழிவு தொடர்பான சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கும். புற்றுநோய் வெள்ளை நாவல் பழத்தில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் பிரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து உடலை பாதுகாக்க உதவும் சேர்மங்களாகும். அதிலும் பிளேவனாய்டுகள், பீனாலிக் சேர்மங்கள் உள்ளிட்ட இந்த ஆன்டி ஆக்சிடென்டுகள், ஊதா நிற நாவல் பழத்துடன் ஒப்பிடும்போது வெள்ளை நாவல் பழத்தில் அதிகமாக காணப்படுகின்றன. வெள்ளை நாவல் பழத்தை தொடர்ந்து உட்கொள்வது, அழற்சியைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவும். செரிமான ஆரோக்கியம் வெள்ளை நாவல் பழத்தில் இருக்கும் நார்ச்சத்து. சீரான செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கலையும் தடுக்கக்கூடியது. முக்கியமாக இந்த பழத்தில் உள்ள இயற்கையான அமிலங்கள், வயிற்றில் அமில-கார சமநிலையை பராமரிக்கவும் உதவுகின்றன. அவை சிறந்த செரிமானத்தை ஊக்குவிப்பதோடு, அசிடிட்டி, அஜீரணம் போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகளையும் தடுக்கக்கூடியவை. கல்லீரல் ஆரோக்கியம் வெள்ளை நாவல் பழம் கல்லீரலை பாதுகாக்கும் தன்மைக் காக ஆயுர்வேத மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி அதன் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடிய தன்மை இதற்கு உண்டு. வெள்ளை நாவல் பழத்தை தொடர்ந்து உட்கொள்வது கல்லீ ரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கல்லீரல் நோய்களையும் தடுக்கும். எடை மேலாண்மை உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புவோருக்கு, வெள்ளை நிற நாவல் பழம் சிறந்த தேர்வாக அமையும். இதில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், வயிறு நிரம்பக்கூடிய உணர்வை தரும். ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை குறைக்கவும் உதவும். உடல் எடை குறைவதற்கும் எடையை சீராக பேணுவதற்கும் வழிவகுக்கும். ஊதா நாவல் பழத்தின் புளிப்புச் சுவையுடன் ஒப்பிடும்போது, வெள்ளை நாவல் பழம் மென்மையான, இனிமையான சுவையை கொண்டிருப்பதாக பலர் கருதுகின்றனர். அதன் இனிமையான சுவை, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமானதாகவும் இருக்கிறது. சாதாரண ஊதா நிற நாவல் பழம் தனக்கே உரிய ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், வெள்ளை நாவல் பழம் பல தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது. குறைந்த கிளைசீமிக் குறியீடு, சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சி டென்ட் பண்புகள், செரிமானம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் உள்ளிட்டவை ஆரோக்கியத்தை இன்னும் மேம்படுத்துவதற்கு வித்திடுகின்றன. முக்கிய வேறுபாடுகள்:- இரண்டு நாவல் பழமும் ஒரே மாதிரியான ஆன்டி ஆக்சி டென்ட் பண்புகளையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருந்தாலும் சுவையிலும், தன்மையிலும் சற்று வேறுபடுகின்றன. ஊதா நிற நாவல் பழம் புளிப்புச் சுவையுடனும், அதிக துவர்ப் புடனும், அடர் நிறச்சதையுடனும் காணப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். வெள்ளை நாவல் பழம் மென்மையானதாகவும், இனிப்பாகவும், சாறு நிறைந்ததாகவும், துவர்ப்பு, புளிப்பு சுவை குறைவாகவும், ஒளி ஊடுருவக்கூடிய சதைப்பகுதியுடனும் காட்சியளிக்கும். கறை ஏற்படுத்தாது. வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பெக்டின் நிறைந்தது. செரிமானத்திற்கும், கோடை வெப்பத்தில் உடலைக் குளிர்விப்பதற்கும், சுவாச பிரச்சினைக லைச் சரிசெய்வதற்கும் வெள்ளை நாவல் பழம் சிறந்தது. வளருமிடம் இரண்டும் தென்னிந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வளர்க்கப்பட்டாலும், வெள்ளை நாவல் குறைவாகக் கிடைக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/which-is-better-in-the-naval-fruit-white-or-purple-find-out




