சென்னை, தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், பலர் குறிப்பிட்ட காலம் கழித்து, சில வங்கிக் கணக்குகளை பராமரிக்காமல் விட்டுவிடுகிறார். அதனால், அந்த வங்கிக் கணக்கில் உள்ள பணமும் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே மறந்துவிடுகிறது. ரிசர்வ் வங்கி இந்த நிலையில், பழைய வங்கி கணக்கில் மறந்த பணத்தை மீண்டும் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. அதாவது, நம்முடைய அல்லது நம் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருந்தால், அந்த பணம் ரிசர்வ் வங்கியின் வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் சேர்ந்திருக்க கூடும். அந்தப் பணத்தை நாம் மீண்டும் கோரலாம். அவ்வாறு, கோரப்படாத வங்கிக் கணக்குகளை என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், உங்கள் வங்கியின் எந்தக் கிளைகளுக்கும் சென்று, ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சமர்ப்பித்து உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். வட்டியும் பொருந்தினால் அதுவும் சேர்ந்தே கிடைக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/forgotten-money-in-your-old-bank-account-reserve-bank-of-india-arranges-for-its-recovery




