ராசிபுரம், ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியில் உள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த பெரிய ஆலமரத்தடியில் சுயம்புவாக தோன்றிய பெண் தெய்வமாக கிராம மக்களால் வழிபடபடும் பொங்களாயி அம்மனுக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டின் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. பொங்களாயி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அலங்கத்தாய் அம்மனுக்கு கிடா பலியிப்பட்டது. பின்னர் இன்டங்காட்டு கருப்பசாமிக்கு கிடா, கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டு முப்பூஜையும் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பொங்களாயி அம்மனுக்கு பெண் ஆடு முதலில் பலியிடப்பட்து. அதன்பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனிற்காக கொண்டு வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட கிடாக்கள் பலியிடப்பட்டன. விடிய விடிய சமையல் இவ்வாறு பலியிடப்பட்ட ஆடு, கோழி, பன்றி இறைச்சிகளை சமைக்கும் பணி விடிய, விடிய நடைபெற்றது. அதற்கு தேவையான சாப்பாடும் சமைக்கப்பட்டது. பின்னர் காலை 6 மணியளவில் சமபந்தி விருந்து பரிமாறப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததோடு, சமபந்தி விருந்தில் பங்கேற்று அசைவ உணவை சாப்பிட்டனர். இந்த திருவிழாவின்போது சமைக்கப்பட்ட அசைவ உணவை யாரும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/rasipuram-pongalayi-amman-temple-festival-participated-men-only




