சென்னை, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆவின் நெய்க்கு பொதுமக்களுக்கான அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் மொத்த வினியோகஸ்தர்களுக்கான விலையில் 500 மி.லி. ஆவின் நெய்க்கு ரூ.5.25ம் (ரூ.327.17-லிருந்து ரூ.332.42 ஆகவும்), ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.23.10-ம் (ரூ.627.62-லிருந்து ரூ.650.72 ஆகவும்), பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்களுக்கான விலையில் 500 மி.லி. ஆவின் நெய்க்கு ரூ.3.15-ம் (ரூ.339.45-லிருந்து ரூ.342.60 ஆகவும்), ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.13.65-ம் (ரூ.651. 13-லிருந்து ரூ.664.78 ஆகவும்) கடந்த 15-ந்தேதியில் இருந்து உயர்த்தி பால் முகவர்கள், சில்லரை வணிகர்கள் மற்றும் மொத்த வினியோகஸ்தர்கள் வயிற்றில் அடிக்கும் வகையில் ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டிருப்பதையும், அதனை சத்தமின்றி அமல்படுத்தி இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன். எனவே ஆவின் நெய் விலை உயர்வு குறித்த உத்தரவை உடனடியாக ஆவின் நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஆவின் நெய் விற்பனையை புறக்கணிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-aavin-management-raising-ghee-prices-milk-agents-welfare-association-condemns-the-move




