நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில் பெரம்பூர் தொகுதியை வைத்து கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார். அது போல் கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர். விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுவிட்டு அவர்கள் ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்துவிட்டு இவர்கள் தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலையில் உள்ள போது இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-by-elections-until-cases-are-concluded-election-commissions-counter-affidavit
