திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் அருகே புரதான சிறப்பு பெற்ற ஆண்டவன் ஆசிரமம் உள்ளது. இங்கு பகவத் ராமானுஜருக்கு பிறகு தோன்றிய பெரிய வைணவ ஆச்சாரியரும், திருப்பதி சீனிவாச பெருமாளின் திருமணி அவதாரமும், ஹயக்ரீவர் பெருமாளின் முழு அனுக்கிரகமும் பெற்றவருமான வேதாந்த தேசிகரின் அவதார தின விழா மூன்று நாட்கள் நடந்தது. சிறப்பு வழிபாடு வேதாந்த தேசிகரின் 758-வது அவதார தினத்தை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடைபெற்றது. தரிசனம் செய்த பக்தர்களுக்கு 11 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திவ்ய பிரபந்த தேசிக பாடல்களை பாடியவாறு திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் புறப்பாடு நடந்தது. ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் இருந்து மகா தேசிகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/vedanta-desikars-758th-birth-anniversary-at-thiruppullani




