மதுரை, மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட நெல்லை ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தண்டவாள சீரமைப்பு பணிகளால் அனைத்து ரெயில்களையும் ஒரே நேரத்தில் இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தண்டவாள சீரமைப்பு மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் பாதை இரட்டை அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இருப்பினும் நெல்லை ரெயில் நிலையத்தில் இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணி முழுமை பெறாமல் இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நெல்லை ரெயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்தன. அதாவது ஒரே நேரத்தில் இரட்டை அகலப்பாதையில் ரெயில்கள் இயக்கு வதற்கான தொழில்நுட்ப பணிகள் நடந்து முடிந்தன. இதன் மூலம் நெல்லை ரெயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, நெல்லை ரெயில் நிலையத்திற்குள் வரும் ரெயில்கள் அனைத் தும் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் 60 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பாதையில் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் தற் போது 70 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். கூடுதலாக 600 மீட்டர் நீளத் துக்கு ஒரு இணை ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. 1-வது, 2-வது மற்றும் 3-வது பிளாட்பார பகுதியில் 686 மீட்டர் நீளத்தில் இருந்த தண்டவாங்கள் முறையே 730 மீட்டர், 716 மீட்டர், 729 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5-வது தண்டவாளம் 791 மீட்டராகவும், 6 மற்றும் 8-வது தண்டவாளங்கள் 815 மீட்டர் நீளமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 4 மற்றம் 5-வது பிளாட்பாரங்கள் 625 மீட்டர் நீளமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் வந்து செல்ல. தென்காசியில் இருந்து நெல்லை வரும் ரெயில்கள் அனைத்தும் 9-வது ரெயில்வே தண்டவாளம் வழியாக ஒரே நேரத்தில் புறப்படவும், வந்து சேரவும் முடியும். அதேபோல, தென்காசி, திருச்செந்தூரில் இருந்து ஒரே நேரத்தில் ரெயில் நிலையத்திற்குள் ரெயில்கள் வந்து செல்ல முடியும். இதனால் நாகர்கோவிலில் இருந்து வந்து செல்லும் ரெயில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நெல்லை-மேலப்பாளையம் இடையே உள்ள ரெயில்வே கேட் பகுதி சிக்னலுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1-வது ரெயில்வே கேட் தானியங்கி கேட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை தொடர்ந்து நெல்லை-தென்காசி, நெல்லை-மேலப்பா ளையம், நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-மதுரை ரெயில் பாதையில் சுமார் 108 புதிய சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் நெல்லை ரெயில் நிலையத்திற்குள் ரெயில் உள்ளே வரும் போதும், வெளியே செல்லும் போதும் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-to-wait-for-signalsfacility-to-operate-all-trains-simultaneously-in-nellai




