புதுடெல்லி, இந்தியா-திபெத் இடையே லிபுலேக் கணவாய் வழியாக பல நூறு ஆண்டுகளாக எல்லை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. திபெத் பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில், 1962-ம் ஆண்டு இந்தியா-சீனா போர் காரணமாக திபெத் உடனான இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. அதன்பின் 1992-ல் மீண்டும் லிபுலேக் கணவாய் வழியாக இந்தியா-திபெத் வர்த்தகம் தொடங்கியது. இதனிடையே 2019-ல் கொரோனா பரவல் காரணமாக லிபுலேக் கணவாய் வழியாக இந்தியா-திபெத் வர்த்தகம் மீண்டும் பாதிக்கப்பட்டது. இந்த வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. லிபுலேக் கணவாய் இந்தியா-சீனா எல்லையை பிரிக்கும் பகுதியாக திகழ்கிறது. இதில், ஒரு பகுதி நம் நாட்டின் கட்டுப்பாட்டிலும், எல்லைக்கு அப்பால் உள்ள தக்லாகோட் சீனாவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்நிலையில் தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா அனுமதி அளித்ததால், லிபுலேக் கணவாய் வழியாக எல்லை வர்த்தகம் மீண்டும் தொடங்கியுள்ளது. இதன்படி 17 பேர் கொண்ட இந்திய வர்த்தகர் குழுவினர் லிபுலேக் கணவாய் பகுதியை கடந்து, திபெத்தின் தக்லா கோட் பகுதிக்கு வெற்றிகரமாக சென்றடைந்தனர். வர்த்தகத்திற்காக லிபு லேக் கணவாய் எல்லை திறக்கப்பட்டதால், எல்லை கிராமங்களை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/lipulekh-pass-opens-india-tibet-border-trade-resumes




