மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தில் கல் வீசப்பட்டது. அங்குள்ள் கந்தல் சதுக்கத்தில் இருந்து கோபால் மந்திர் வரையிலான சுமார் 900 மீட்டர் நீளத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. சிம்மஸ்த கும்ப மேளாவையொட்டி சாலையை 15 மீட்டருக்கு பாதையை விரிவாக்கம் செய்து வருகின்றனர். இதற்காக சாலையோரம் உள்ள சுமார் 60 வழிபாட்டுத்தலங்கள் அகற்றப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், ஷாஹி மஸ்ஜித் மற்றும் கடே ஹனுமான் மந்திருக்கு அருகில் சாலையை விரிவாக்கம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை மட்டும் இடிக்க நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மசூதி நிர்வாகத்துடன் மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மசூதியின் ஒரு பகுதியை மட்டும் இடிக்க மசூதி நிவாகமும் சம்மதித்தது. அவர்களே மசூதியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதற்கு மசூதியின் மற்றொரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை நடந்த மசூதி இடிப்பு பணியில் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் உட்பட 2,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல் வீசித் தாக்கினர். இதையடுத்து போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். அப்படியும் முடியாததால் போலீஸார் கூட்டத்தில் தடியடி நடத்தினர். இதனால் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து உஜ்ஜயினின் சில பகுதிகளில் பதற்றம் நிலவியது. காங்கிரஸ் எம்.பி இம்ரான் பிரதாப்காரி மசூதி வளாகத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ``மாநில அரசு பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சாலை விரிவாக்கம் என்ற பெயரில் உஜ்ஜைன் ஷாஹி மசூதியை இடிக்கும் நிர்வாக முயற்சிகள் சற்று உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். 600 ஆண்டுகள் பழமையான புராதன சின்னத்தை சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுக்காக இடிப்பது வெறுப்பின் உச்சம். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது நிர்வாகம் என்ன செய்தியை சொல்ல விரும்புகிறது'' என்று கேட்டுக்கொண்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/trending/mosque-demolished-for-road-widening-police-disperse-crowd-using-lathi-charge-and-tear-gas




