வார்சா, போலந்தில் உள்ள வோக்ஸ்வேகன் கார் தொழிற்சாலையில் 100 ஆடுகள் வேலைக்கு அமர்த்தப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது. இயற்கை பராமரிப்பு போலந்து நாட்டில் போஸ்னான் பகுதியில் பிரபலமான வோக்ஸ்வேகன் கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையின் வளாகத்தில் பிரமாண்ட சோலார் பேனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேனல்களுக்கு அடியில் புற்கள் நிறைந்து காணப்பட்டது. சோலார் பேனல்களுக்கு அடியில் வளரும் புற்களை இயந்திரங்கள் கொண்டு வெட்டும்போது பேனல்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. அதனைத் தவிர்ப்பதற்காக சுமார் 100 ஆடுகள் வேலைக்கு அமர்த்தப்பட்டன. இந்த ஆடுகளின் வேலை வளாகத்தில் உள்ள புற்களை மேய்ந்து அகற்ற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு புல் வெட்டும் இயந்திரங்கள் இயங்குவதால் ஏற்படும் கார்பன் உமிழ்வு மற்றும் சத்தம் இதனால் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகிறது. மேலும் ஆடுகளுக்குத் தேவையான இயற்கை உணவு கிடைப்பதுடன், தொழிற்சாலை வளாகமும் ரசாயனங்கள் இன்றி சுத்தமாகப் பராமரிக்கப்படும். நவீன தொழில்நுட்பத்தோடு இயற்கையையும் இணைக்கும் வோக்ஸ்வேகனின் இந்த சுற்றுச்சூழல் முயற்சி சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/volkswagen-car-factory-in-poland-hires-100-sheep




