சென்னை, சென்னை சென்டிரல் - திருப்பதி இடையிலான சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தற்காலிகமாக கூடுதல் பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தெற்கு ரெயில்வேயில் அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை சென்டிரலில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16057), மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16058) நாளை (1-ந்தேதி) முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரையில் தற்காலிகமாக ஒரு இருக்கை வசதி கொண்ட பெட்டி (சேர் கார்) இணைத்து இயக்கப்பட உள்ளது. சென்னை சென்டிரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (12679) கோவை - சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (12680) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை கூடுதலாக ஒரு சேர் கார் பெட்டி இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-tirupati-saptagiri-express-additional-coach




