வாஷிங்டன், 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிஅமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழா 'கிளைமாக்சை' எட்டி விட்டது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி நாளை மறுநாள் நள்ளிரவு 12.30 மணிக்கு நியூஜெர்சியில் நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி, ஸ்பெயினுடன் மோதுகிறது. 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, உலகக் கோப்பை கோப்பை மற்றும் தங்கப் பதக்கங்களுடன், முதல் முறையாக பிரத்யேக 'சாம்பியன்ஷிப் ரிங்' (Championship Ring) வழங்கப்பட உள்ளது. அமெரிக்க விளையாட்டு மரபை முன்மாதிரியாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள. மொத்தம் 2,026 சிறப்பு மோதிரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 30 மோதிரங்கள் சாம்பியன் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,996 மோதிரங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களுக்கான அதிகாரப்பூர்வ நினைவுப் பொருளாக விற்பனை செய்யப்பட உள்ளன. இறுதிப் போட்டி முடிந்தவுடன், சாம்பியன் அணியின் கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளருக்கு தற்காலிக சாம்பியன்ஷிப் ரிங் வழங்கப்படும். பின்னர், 30 வீரர்களுக்கும் தனிப்பட்ட அளவுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட நிரந்தர மோதிரங்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/football/a-first-in-history-prize-awarded-by-fifa-to-the-champion-team




