மும்பை, மராட்டிய மாநிலம் மும்பை, புனே இடையே எக்ஸ்பிரஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன. விபத்து - ஒருவர் பலி இந்நிலையில், புனேவில் இருந்து 5 பேருடன் கார் மும்பைக்கு சென்றுகொண்டிருந்தது. மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் வடக் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது, காய்கறி ஏற்றிக்கொண்டு முன்னே சென்ற டெம்போ மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த துஷார் பம்கர் என்பவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/car-crashes-into-tempo-in-tunnel-one-killed




