புதுடெல்லி, 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா தரப்பில் 123 பேர் கொண்ட படை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இரட்டை சாம்பியனான இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, நடப்பு காமன்வெல்த் விளையாட்டின் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் இறுதிப்போட்டியில் தங்கம் வென்று அசத்தி உள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானு ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையைப் படைத்தார். ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் இந்நிலையில் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய பளுதூக்குதல் வரலாற்றில் மற்றொரு சிறப்பான அத்தியாயம். திறமைமிக்க மீராபாய் சானு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 48 கிலோ எடைப்பிரிவில் அபாரமான திறமையை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றதுடன், தனது கணக்கில் மொத்தம் நான்கு காமன்வெல்த் பதக்கங்களைச் சேர்த்துள்ள அவர், ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/prime-minister-modi-congratulates-commonwealth-games-gold-medalist-mirabai-chanu




