டாக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக, வங்காளதேச டெஸ்ட் அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சான்டோ, காயம் காரணமாக முக்கிய வீரர்கள் இல்லாவிட்டாலும் அணியின் மீது முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், காயங்கள் என்பது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. நஹித் ராணா, ஷொரிபுல் இஸ்லாம், லிட்டன் தாஸ் போன்றவர்கள் அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள். ஆனால் எந்த வீரருக்கும் எந்த நேரத்திலும் காயம் ஏற்படலாம். அதைப் பற்றி கவலைப்பட்டு பயனில்லை, என்றார். மேலும், தற்போதைய அணியில் இருக்கும் வீரர்களும் பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு தங்களின் திறமையை நிரூபிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. கேப்டனாக எப்போதும் சிறந்த வீரர்களே கிடைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்க முடியாது. வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு வீரர் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆஸ்திரேலியா செல்லும் இந்த அணி மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் தரமான கிரிக்கெட்டை விளையாட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். யார் இல்லாமல் போனார்கள் என்பதை நினைப்பதை விட, தற்போது இருக்கும் அணி எப்படி விளையாடப் போகிறது என்பதுதான் முக்கியம். இந்த அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/we-will-play-well-in-australia-bangladesh-captain-confident




