நியூயார்க், 1958-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி 5-2 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் பிரேசில் அணிக்காக ஆடிய ஜாம்பவான் பீலே பயன்படுத்திய சீருடை ஏலத்தில் விடப்பட்டது. இந்த சீருடை ரூ.47.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா கேப்டன் மரடோனா அணிந்திருந்த சீருடை கடந்த 2022-ம் ஆண்டில் ரூ.89.5 கோடிக்கு ஏலம் போனது. அதுவே அதிக விலைக்கு ஏலம் போன கால்பந்து வீரரின் சீருடை என்பது நினைவுகூரத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/football/pelés-world-cup-jersey-auctioned-for-47-crore




