திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் கோவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காக கோவில் நிர்வாகத்தின் கீழ் நேரடியாக தயார் செய்து சர்க்கரை பொங்கல் (100 கிராம்), புளியோதரை (100 கிராம்), ஒரு வடை (50 கிராம்), ஒரு அப்பம் (50 கிராம்), ஒரு லட்டு (50 கிராம்) ஒரு முறுக்கு (50 கிராம்) ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கோவிலுக்குள் 3 இடங்களில் பிரசாதம் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரசாதங்கள் கடந்த பல ஆண்டுகளாக தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. திடீர் விலை உயர்வு இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் பிரசாதங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வழக்கம் போல 50 கிராம் எடை கொண்ட ஒரு லட்டு ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆகவும், 50 கிராம் முறுக்கு ரூ.10-ல் இருந்து ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர 50 கிராம் எடை கொண்ட மெதுவடை முதல் முறையாக மிளகு வடையாக தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக விலை உயருகிறது. கடந்த காலங்களில் 100 கிராம் எடைகொண்ட புளியோதரையை 150 கிராமாக உயர்த்தி ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக வும், 100 கிராம் பொங்கலை 150 கிராமாக உயர்த்தி ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் செல்வி கூறும்போது, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பிரசாதங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிரசாதங்களில் எள், ஓமம் சேர்க்கப்பட்டு தரமாகவும், ருசியாகவும், எடையின் அளவு சரியாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றார். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கோவிலுக்கு வந்து சென்றதற்கு அடையாளமாகவும், கோவிலில் செய்யக்கூடிய பிரசாதம் ருசியாகவும், தரமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையால் தான் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கோவிலில் இருந்து பிரசாதங்கள் வாங்குகிறோம். அதுவும் மிக குறைந்த விலை என்பதால் கூடுதலாக பிரசாதங்கள் வாங்கி செல்கிறோம். ஆனால் பிரசாதத்திற்கு விலை உயர்த்தப்படுகிறது என்பதை கேட்கும்போது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/price-hike-for-prasadam-at-thiruparankundram-murugan-temple




