ஆன்லைனில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் உணவாக பாதுகாப்பானவைதானா? இந்தக் கேள்வியை எழுப்பும் வகையில், கர்நாடகாவில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. நச்சுத்தன்மை கொண்ட Datura (ஊமத்தை) பழங்கள் மற்றும் விதைகள் ஆன்லைனில் உணவுப் பொருட்களாக விற்பனை செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, Amazon, Instamart, BigBasket மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய விசாரணையில், பல இ-காமர்ஸ் தளங்களில் Datura பழங்கள் மற்றும் விதைகள் விற்பனைக்காக இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. சில பொருட்களில் FSSAI உரிமம் அல்லது பதிவு எண்களும் இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், இவை சில கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. Amazon தரப்பில் பதில் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. Instamart கூடுதல் ஆவணங்களை வழங்க அவகாசம் கேட்டுள்ளதாகவும், BigBasket, ஆன்லைன் விற்பனையை நிறுத்திவிட்டதாகவும், இனி “மனிதர்கள் சாப்பிடுவதற்கல்ல” என்ற எச்சரிக்கையுடன் லேபிள் செய்வதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை எனக் கூறிய அதிகாரிகள், மறு உத்தரவு வரும் வரை மூன்று நிறுவனங்களின் உணவு விநியோக உரிமங்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். மேலும், Datura தொடர்பான ஆன்லைன் பட்டியல்கள், விளம்பரங்களை நீக்கவும், உணவாக அதனை விற்பனை செய்தல் மற்றும் விநியோகத்தில் போன்றவற்றை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பொருட்களை வழங்கிய விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்களின் உரிமங்கள் மற்றும் பதிவுகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/food/datura-sale-row-karnataka-suspends-food-licences-of-amazon-instamart-bigbasket




