ஆஸ்திரேலியக் கிரிக்கெட் போட்டிகளை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் நோக்கில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) புதிய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான ‘Cricket TV’-யை அறிமுகப்படுத்தியுள்ளது. நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ், கிளாசிக் போட்டிகளின் காட்சித்தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் உள்ளடக்கங்களை இந்தத் தளத்தில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். எப்படி இயங்குகிறது இந்தத் தளம்? tv.cricket.com.au என்ற இணையதளம் மூலம் செயல்படும் இந்தத் தளம், முதற்கட்டமாக 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ரசிகர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளம், மொபைல் செயலிகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் (Connected TV) உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் மூலம் இந்தச் சேவையை எளிதாக அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளது. Cricket TV என்னென்ன சிறப்பம்சங்கள்? நேரலை கிரிக்கெட் போட்டிகளுடன் சேர்த்து, போட்டிகளின் முக்கியத் தருணங்கள், ரீப்ளேக்கள், பிரத்யேக ஆவணப்படங்கள் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பிரமாண்டமான Archive (பழைய வரலாற்று ஆவணங்கள்) வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சிகளும் இந்தத் தளத்தில் இடம்பெறுகின்றன. எனினும், ஒவ்வொரு நாட்டிற்கான உள்ளூர் ஒளிபரப்பு உரிமைகளுக்கு ஏற்ப (Broadcasting rights) உள்ளடக்கங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. செயற்கை நுண்ணறிவின் (AI) பங்கு இந்தத் தளத்தின் மிகப்பெரிய பலமே இதன் நவீன தொழில்நுட்பம்தான். இதில் AI தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் போட்டிகளின் முக்கியத் தருணங்களை விநாடிகளில் அடையாளம் கண்டு ஹைலைட்ஸ் உருவாக்குவது, ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான வீடியோக்களை எளிதாகத் தேடிக் கண்டுபிடிப்பது போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. Cricket TV டிஜிட்டல் உலகை நோக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட்! இதுவரை பல்வேறு நாடுகளின் தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் மூலமாக மட்டுமே ரசிகர்களைச் சென்றடைந்து வந்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா, தற்போது தனது சொந்த டிஜிட்டல் தளம் மூலம் உலகளாவிய ரசிகர்களுடன் நேரடியாகக் களம் காணத் தொடங்கியுள்ளது. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் வெறியர்களை ஒரே குடையின் கீழ் இணைக்கும் இந்த முயற்சி, விளையாட்டு ஒளிபரப்புத் துறையின் மற்றுமொரு முக்கியமான டிஜிட்டல் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. Byju's: அன்று BCCI ஸ்பான்சர். இன்று சிங்கப்பூரில் சிறை! - பைஜூஸ் சாம்ராஜ்ஜியம் சரிந்தது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://sports.vikatan.com/cricket/cricket-australia-launches-global-streaming-service




