Doctor Vikatan: என் 15 வயது மகளுக்கு தூக்கத்தில் பற்களை நறநறவெனக் கடிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்படிப் பற்களைக் கடிப்பதற்கு மன அழுத்தம் காரணமாக இருக்குமா. இது மனநல பாதிப்பின் அறிகுறியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் நித்யா பிரதீப். உளவியல் மருத்துவர் நித்யா பிரதீப் தூக்கத்தில் பற்களைக் கடிக்கும் பிரச்னைக்கு 'ப்ரக்ஸிசம்' (Bruxism) என்று பெயர். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தமும் அவற்றில் ஒன்று. பகல் நேரத்தில் வேலைகளில் பிஸியாக இருந்தாலும், இரவில் விழிப்புணர்வு இல்லாத (Subconscious) தூக்க நிலையில் மன அழுத்தம் காரணமாக பற்களைக் கடிக்கும் பழக்கம் ஏற்படலாம். பற்கள் அல்லது தாடை (Jaw) சார்ந்த பிரச்னைகள் இருப்பது, தவறான தூக்க முறை அல்லது போதுமான அளவு தூக்கமின்மை (Poor Quality of Sleep), அதிகப்படியான புகைப்பழக்கம், மது அருந்துதல் மற்றும் அதிக அளவில் கஃபைன் எடுத்துக்கொள்ளுதல் போன்றவையும் காரணங்களாக இருக்கலாம். உடல் பருமன் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive Sleep Apnea) எனப்படும் பிரச்னை ஏற்படலாம். அதன் காரணமாகவும் தூக்கத்தில் பற்களைக் கடிக்கலாம். மன அழுத்தத்திற்கான மருந்துகள் (Anti-depressants) உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளும் காரணமாகலாம். பல் வலி'மனசே சரியில்ல.' அடிக்கடி இப்படி உணர்கிறீர்களா. உங்களுக்குத் தேவை, மனநல டாக்டர்! பற்களைக் கடிக்கும் பிரச்னை தொடர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு தாடை வலி (Jaw Pain), தலைவலி (Headache), பற்கள் தேய்மானமடைவது போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். பற்களைக் கடிக்கும் பிரச்னை உள்ளவர்கள், முதலில் பல் மருத்துவரிடம் (Dentist) அல்லது பொது மருத்துவரிடம் (General Physician) சென்று பற்கள் மற்றும் தாடையில் வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா எனப் பரிசோதிக்க வேண்டும். தூக்கப் பிரச்னை இருந்தால், அது சார்ந்த பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். மன அழுத்தம் முக்கியமான காரணமாக இருக்கும் பட்சத்தில், உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெற்று மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/health/is-grinding-teeth-during-sleep-a-sign-of-a-mental-health-issue




