துபாய், பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் முதலில் பேட்டிங். இந்த நிலையில் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் வீராங்கனைகள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் பாகிஸ்தான் 18.1 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஷாவல் அதிகபட்சமாக 14 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் ஸ்ரீ சரணி, பிரேமா அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அபார வெற்றி இந்திய அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா 12 ரன்களிலும், ஸ்மிருதி மந்தனா 9 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த பிரதீகா ராவல் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 18 பந்துகளில் 18 ரன்களும், தீப்தி சர்மா 14 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி, 8.4 ஓவர்களில் 57 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் பாத்திமா சனா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-t20-cricket-india-women-won-by-7-wkts




