ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி தலைமையில் ஆய்வாளர் உள்ளிட்ட 10 போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சியின் அனைத்துக் கதவுகளையும் மூடி, அனைவரது செல்போன்களையும் பறிமுதல் செய்து சோதனையை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சோதனையின்போது திடீரென ஓட்டம் பிடித்த நபர் ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விரட்டிச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ஆவணங்கள் இன்றி கணக்கில் வராத 1.54 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் அவரின் பேன்ட் பாக்கெட்டில் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், நகராட்சி ஆணையாளரின் வாகன ஓட்டுனர் ரங்கசாமி என்பது தெரியவந்துள்ளது. பணம் பறிமுதல் அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நகராட்சி கண்காணிப்பாளர் நிரஞ்சனா தன்னிடம் இந்தப் பணத்தைக் கொடுத்து வெளியே எடுத்துச் செல்லும்படி கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நிரஞ்சனாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத 1,54,000 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்திருந்த ஆணையாளரின் வாகன ஓட்டுநர் ரங்கசாமி மற்றும் நகராட்சி கண்காணிப்பாளர் நிரஞ்சனா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “அமைச்சருக்கே லஞ்சம் குடுத்துட்டோம்.’’ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/sathyamangalam-municipality-vigilance-department-raid-update




