வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் 20 வயது மகன் பாரன் டிரம்பை குறிவைத்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் அதிர்ச்சி வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் ராணுவத்துடன் தொடர்புடைய ஊடகம் வெளியிட்டதாக கூறப்படும் அந்த வீடியோ உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது “பாரனை எங்கு கொல்லலாம்?” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. அதில் பாரன் டிரம்பின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுவதாகவும், அவரை கொலை செய்பவர்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.95 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி பாரன் டிரம்ப் படிக்கும் பல்கலைக்கழகம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ரகசிய சேவை அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பான காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த வீடியோ குறித்து அமெரிக்க ரகசிய சேவை அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்கா- ஈரான் மோதல் பாதுகாப்பில் உள்ள நபர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தகவல்கள் குறித்து நாங்கள் விசாரிக்கிறோம் என்று ரகசிய சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். எனினும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார். அமெரிக்கா, ஈரான் இடையே ஏற்கனவே கடுமையான மோதல் மற்றும் பதற்றம் நிலவி வரும் நிலையில், டிரம்பின் குடும்பத்தினரை குறிவைத்து வெளியாகியுள்ள இந்த வீடியோ புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/95-crore-bounty-on-trumps-sons-head-sensation-caused-by-announcement-from-iranian-state-media



