சென்னை, தமிழக காவல் துறையில் டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் பதவியேற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில மாநிலம் முழுவதும் ஒரு மாத காலத்திற்கு சிறப்பு தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் கடந்த 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை, ஒரு வார காலத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 282 என்.டி.பி.எஸ். வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 341 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக 604 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 8-ந்தேதி வரை,, ஒரு மாத காலத்திற்கு இந்த சிறப்பு போதை பொருள் தடுப்பு நடவடிக்கையானது தொடரும் எனவும் காவல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-crack-down-on-drugs-across-tamil-nadu-358-arrested




