வயநாடு, நிலச்சரிவு கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல நேற்று முன்தினம் கல்லாடி மீனாட்சி பாலம் பகுதியில் சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பகுதியில் இருந்து நீரோடு மண் கீழ் நோக்கி அடித்து வரப்பட்டது. அதோடு அங்குள்ள சாலை, பாலத்தை மண் மூடியது. 3 பேர் உயிரிழப்பு அங்கு சாலையில் நின்ற டேங்கர் லாரியை நிலச்சரிவு அடித்து சென்றது. மேலும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் உயிரை கையில் பிடித்தபடி ஓட்டம் பிடித்தனர். ஆனால், சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் சிலர் நிலச்சரிவில் சிக்கினர். தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், வயநாடு போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மேப்பாடியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 4 பிரிவுகளாக மீட்பு குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் காணாமல் போனவர்களை சினிபர், கடாவர் வகையை சேர்ந்த 2 மோப்ப நாய்கள் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்தவர்களை தேடி வருகின்றனர். பலி எண்ணிக்கை உயர்வு இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமான 5 பேரில் ஒருவரது உடல் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தேடுதல் பகுதியின் 1-ல் இருந்து இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக அமைச்சர் ஏ.பி. அனில்குமார் தெரிவித்துள்ளார்.எஞ்சிய 4 பேரைத் தேடும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி காயமடைந்த 10 பேரில், 3 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், 4 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நிலச்சரிவு குறித்து ஆய்வு செய்ய விசாரணைக் குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/one-more-body-recovered-from-wayanad-landslide-site-death-toll-rises-to-4




